கற்பு அழிப்பு
கற்பழிப்பு........
இன்றைய
இந்தியாவின்
நாளைய பெயர்_
பிஞ்சுகளின்
கற்பை சூறையாடும்
கொடூரம்...
கல்நெஞ்சம்
படைத்த கயவர்கள்
உலவும் கானகம்...
அன்பும் பண்பும்
பெருமளவில்
கிடைக்கும் பகுதியாம்
என் தேசம்...
கற்பழிப்பு
என்ற துர்நாற்றம்
மட்டும் புழுதியாய்
இங்கு வீசும்....
கருகலைப்பு பாவம்
என்றால்
கற்பழிப்பு மட்டும்
சரியா..!
இது
அடிமட்ட தேசமா
இல்லை
அடிபட்ட தேசமா....
இங்கு
நீதிக்கே
நீதி இல்லை.
நிலைப்பது எப்படி
பெண்பிள்ளை....
பெண்களின் பாதுகாப்பு
பெயருக்குத்தான்.
பாதுகாப்பும் பழுதாகிவிட்டது.
பார்வைகளும் கழுகாகிவிட்டது...
காமம்
இங்கு எல்லோருக்கும்
நாமம் போட்டபடி....!