நீயும் இறங்கு தீயில்
வண்ணான் சொன்னான்
வண்டிக்காரன் சொன்னான்
என என்
கற்பு நிருபணத்திற்கு
கனலில் தள்ளிய ராமா !
"அவனும்தானே இவளை
ஆண்டுகள்பல நீங்கி இருந்தான்
அங்கு என்னென்ன ஆனதோ
ஆர் அறிவார்? "
என வண்ணாத்தி ஒருத்தி
வழியில் சொல்லிப் போனாள் .
ஆகையால் அண்ணலே!
நீயும் தீயிறங்கி
நீருபிப்பாயா?
மாட்டாய் ஆண்குலமே .
என்போல்
வைராக்கியாமாய் காட்டுக்குப் போகாமல்
கோழையாய் கோர்ட்டுக்குத்தான் போவாய்.!