மனம் மலராக
உடல் அழுக்கு வெளியேற ,
வாய்கள் ஒன்பது உண்டு .
மன அழுக்கு வெளியேற ,
வழி தான் உண்டா ?
முறை தான் என்ன?
ஒன்பது வாசல்கள் வேண்டாம் ,
உயர்வான எண்ணம் ஒன்று போதும்.
நிதர்சனத்தின் நிகரென்று ,
நிம்மதியாய் வழியுண்டு .
உதவிடும் எண்ணம்,
உடன் செய்திடல் .
ஊருக்கு உழைத்திடல் ,
உண்மை பேசிடல் .
நன்மை செய்திடல் ,
தவறேதும் செய்யாதிருத்தல்.
உன் வழி இதுவென்றால் ,
உனக்கு நிகர் எவருண்டு !
மனம் மலராகும் ,
இருந்து பார் ,
வாழ்ந்து பார் ,
இழப்பது ஒன்றுமில்லை .