காதல் கடல் - மணியன்
காதல்
கரையில் அமர்ந்தும்
கடலில் நீந்தும் . . .
காதல்
மடுவில் இருந்தும்
மலையில் தவமிருக்கும் . . . .
காதல்
உயிரில் நுழைந்து
உணர்வாய் உறையும் . . . .
காதல்
கண்ணில் விழுந்து
காட்சியாய் குளிரும் . . . .
காதல்
தூரம் இருந்தும்
தொடத் துணியும் . . . .
காதல்
மறக்க நினைத்தும்
மனதில் ஒளிரும் . . . . .
காதல்
உயரேயும் நடக்கும்
ஊர்ந்தும் பறக்கும் . . . .
காதல்
கவிதையாய் வளரும்
காவியமாய் விரியும் . . . . .
காதல்
ஊர் உறங்கிட
ஊமையாய் பேசும் . . . . .
காதல்
மண்ணில் இல்லா
மனிதனே இல்லை. . .
காதல்
தோற்றும் ஜெயிக்கும்
தோற்றால் வளரும்
வெற்றியில் மிளிரும் . . . .
காதல்
காலம் போல
கணமும் கூட வரும். . .
காதல்
காற்றைப் போல
கல்லறையிலும் வாழும் . . . . . .
*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*