ஏக்கங்கள்
பால் சோறு
சிதறி விளையாடும் பருவம்தான் எனக்கு,
பாரம் தூக்குகிறேன்......
தாயின் மடியில்
துயில வேண்டிய வயதுதான்,
பட்டினியால் துவண்டுபோகிறேன்.....
ஒரு பிடி உணவில்
நிறைந்து போகும் சிறிய வயிறுதான்,
உணவின்றி ஒட்டிபோயிருக்கு....!
தாயின் முந்தானைப்பற்றி
நடக்க ஆசைதான்.......
முடியவில்லை, கையெங்கும்
ஒரே காயங்கள் இருக்கே....!
அம்மா! என்னைக்
கட்டிப்பிடித்து தூங்கு......,
உடம்பெல்லாம் ஒரே வலியாருக்கு.....
அம்மா! ஓடி வந்து
ஒரு முத்தம் கொடு......
வேலை செய்யும் நேரத்தில்
கிடைக்கவில்லை உன் எச்சில் முத்தங்கள்........
கட்டித்தழுவு,
உன் கருவறையில்
இருந்த தருணங்கள் உணர்ந்துகொள்கிறேன்...........
இப்படிக்கு,
உன் தனங்களில் பால் சுவைத்த,
இன்னும் பால் சுவைக்கும்,
சிறுபாலகன்.