பூவில் ஓர் ஆயுதம்

புத்தம் புதுப்
பூக்களில் உறங்கும்
தேனைத் தேடிக்கண்டு
திருட்டுக் கள்ளாய்
சிற்றுடல் நோக உறிஞ்சி
மிஞ்சிய தேன் விஷமாகி
உயிரைக்குடித்து தலைசாய்ந்து
மாண்டு வீழும்வரை
வண்டினங்கள் உணர்வதில்லை
பூக்களும் ஆயுதம்
ஏந்துமென !!

எழுதியவர் : கார்த்திகா AK (26-Jul-14, 12:15 pm)
Tanglish : poovil or aayutham
பார்வை : 785

மேலே