சற்று இனிமையாக

ஓய்வில்லா காலங்கள்...

ஒழிந்து கொள்ளும் சில நேரங்கள்...

பார்வை யில்லா கனவுகள்...

பறந்து செல்லும் நினைவுகள்...

கண்ணில் கிடைக்காத ஆசைகள்...

கிடைத்தாலும் நிலையில்லா மேகங்கள் ...

முத்தம் கொடுத்த அன்னையின் கைவிரல்கள்...

முப்பொழுதும் மறவாத இனிமைகள் ...

சத்தம் செய்யும் பறவைகள்...

சாறலை அழைக்கும் பனிதுளிகள்...

விண்ணில் போகும் மேகங்கள்...

விளை சொல்லாத தென்றல்கள்...

மண்ணில் மறையும் காலங்கள்...

மக்காத நெஞ்சில் சில ஈரங்கள்...

எழுதியவர் : காந்தி. (26-Jul-14, 9:12 pm)
Tanglish : satru enimayaaga
பார்வை : 195

மேலே