சாதியால் சம்பாரிக்கும் நல்லவர்களுக்கு சமர்ப்பணம்

அனைவரின் மூச்சுக்காற்றை
சேர்த்து சுமக்கும் ...
காற்றுக்கு தெரியவில்லை
சாதியின் வாசம் ...

நான் விடும் மூச்சு காற்று
என் நண்பனை சேரும் ..
காரணம்
நட்பிற்குள் இல்லை
சாதிகள் ..

முடிந்தால் வாங்கி கொள்ளுங்கள் ..
உங்கள் சுவாச காற்றை ..
உங்கள் சாதி.... சாதி காற்றை
ஏதாவதொரு கடைகளில் ..

சாதி வாசிகளே ..
ஒருகணம் ..இருந்து பாருங்கள்
எங்கள் சமத்துவ காற்றை
சுவாசிக்காமல் ..
அக்கணம் தெரியும் ..
உங்கள் சாதியின் மகத்துவம் ...

எவனோ ஒருவன் கிறுக்கிய சாதியை ..
இன்னும் சித்திரமாய் எண்ணி
நிற்கும் ..நல்லோர்களே ....
உங்களின் குழந்தைகளிடம் கேட்டு பாருங்கள்
அவர்களின் சாதி பற்றி ..
என்ன அது என்று கேட்கும் ?

சாதி பேசியவன் எல்லாம்
என்ன சாதித்தான் என்று தான் புரியவில்லை ...

பொய்யில் வாய்த்த புலமைகளே
போகும் நாட்களை எண்ணி தான் இந்த வாழ்கை..
முடிந்தவரை நீங்கள் வாழுங்கள் ..
எதுவும் இல்லாத சாதிக்காக சாவதை விட ..

சாதி பிரியர்களுக்கு மட்டும் ...

#குமார்ஸ் ...

எழுதியவர் : குமார்ஸ் (27-Jul-14, 2:12 am)
சேர்த்தது : kumars kumaresan
பார்வை : 53

மேலே