கருகிய என் இதயம் காத்திருகுதடி உனக்காக 555

பெண்ணே...

நீ தூக்கி எறிந்த காகிதங்களை
நான் சேகரித்தேன்...

என்னை பைத்தியம்
என்றாய்...

உன் பின்னால் வந்தேன்
என்னை ஏளனமாக பார்த்தாய்...

என் காதலை சொன்னபோது
புருவம் உயர்த்தினாய்...

காலம் தாமதித்து நீ
சம்மதம் சொன்னாலும்...

உன்னை முழு மனதுடன்
ஏற்றேனடி...

உன் உறவுகளுக்காக என்னை
நீ தூக்கி எரிந்திருந்தால்கூட...

சந்தோசம் தானடி
உன் வாழ்விற்காக...

முகம் தெரியாத யாரோ ஒருவருக்காக
என்னை எரிந்தாயடி...

உன் காகிதமாய்
என்னை...

வலிக்குதடி காதல் கொண்ட
என் உள்ளம்...

நான் கொண்ட காதலும்
உன் மீதான பாசமும்...

உனக்கு வேஷமாக
போனதா...?

நீ தூக்கி எறிந்த
என் காதலால்...

நான் போட்ட நந்தவனம்
கூட எரியுதடி...

ஒதுங்கி நிற்குதடி இபோதும்
ஓர் மலர்ச்செடி...

உன் வாழ்வில் உன்னை வாழ்த்தும்
பூக்களாமாரி கருகிவிட...

காத்திருகுதடி உனக்காக
கருகிய என் இதயம் கூட.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (27-Jul-14, 1:28 pm)
பார்வை : 911

மேலே