சுவடுகள்

நின் காலடிச்சுவடுகள் ......


கால்நூற்றாண்டு
காலங்களாய்
காலூன்றி கோலோச்சிய
காலச்சுவடுகளையே
 
கச்சிதமாய்
கண்மூடி கண்திறக்கும்
கணநேர பொழுதினிர்க்குள்

காணாது செய்திடும்
கடலலைகள் ..

காலாறக்கரையினில் 
பொதிந்து பதிந்திட்ட - நின்
காலடிச்சுவடுகளை மட்டும்
கரைக்கமனமின்றியே
கட்டுக்கோப்புடன்
அலையாடுவதெப்படி ?? ......

எழுதியவர் : (28-Jul-14, 5:31 pm)
பார்வை : 78

மேலே