என் இதயத்தை காணவில்லை
என் இதயத்தை காணவில்லை
உன் அறை கதவை
அது இன்னும் தட்டி கொண்டிருக்கின்றது
ஒரு முறை திறந்து பார்
உன்னை பற்றி கவிதை சொல்லும்.........
உன் கருங்கூந்தலை
காற்றில் உலர வைக்காதே !
பகல் பொழுதுகளிலேயே
பூக்கள் மலர்ந்து விடுகின்றன...
பாவம் அவை!...
நான் உன்னை காதலிப்பதற்காக
அவைகளுக்கு தண்டனை தராதே!...
விழுதுகளை பிடித்து கொண்டு
விளையாடும் சிறுவனை போல
உன் நினைவுகளை மட்டுமே
பற்றி கொண்டு...
நான் உயிர் வாழ்கிறேன் .
நீண்ட கடற்கரையோரம்
அலைந்து திரிந்து
சிற்பி சேகரிக்கும் குழந்தை போல
உன் கலடிதடங்களின் மேல்
நடந்து நடந்து ...
உன் நினைவுகளை சேகரிக்கின்றேன்.
நீண்ட தூரம்நடந்து விடாதே!
என் கால்கள் வலிக்கின்றன
உன் காலடி தடங்களை
என் கண்ணீரால் நிரப்புகின்றேன்
நீண்ட தூரம் சென்று விடாதே!
என் கண்ணீர் கூட வற்றி விட்டது
உனக்காக அழுது அழுது ......
ஒரு முறை திரும்பி பார்!
உனக்கு பின்னால்
உனக்காக ஒருவன்
உன்னையே நினைத்து
உருகி கொண்டிருக்கின்றான்.
நொடி நேரம் தாமதமின்றி
உன்னையே தொடர்ந்து கொண்டிருக்கின்றான்.
ரோஜா பூ மீது
முள்ளுக்கு காதல் இருக்கலாம்!
ஆனால்ரோஜாபூ சூரியனை காதலிக்கலாம்
முடிவையாவது சொல்லிவிடு
அந்த முள் இன்னொரு ரோஜாவை சுமக்க
ஆயத்தமாகி விடும்.
அந்த முள் சுமக்கும்
இன்னொரு ரோஜா
உன் நினைவுகள் மட்டுமே!!!!........
உனக்கு வேண்டுமென்றால்
உயர்ந்த பூக்களை கூந்தலில் சூடுவது
பிடித்தமானதாக இருக்கலாம்
ஆனால்!!
இந்த பூ
எளிமையான உன் கூந்தலில் மட்டுமே கூடியிருக்க விரும்புகின்றது........