உன்னோடு சேர்ந்தேன்

கண நொடியில்
அழவும் வைக்கிறாய் !
சிரிக்கவும் வைக்கிறாய் !

நிழலென உன்னை தொடர்கிறேன்
இருளில் சென்று விடாதே நான்
மறைந்து விடுவேன் ..!

சிறு பிள்ளையை போல் ஏங்குகிறேன்
உன்னோடு பேச
உன்னோடு வாழ
மண்ணோடு சேரும் வரை..!!

நீ நிழலாக வேண்டாம்
உடலுக்கு உயிர் சேர்க்கும்
இதயமாய் வந்துவிடு !
என்னை சேர்ந்துவிடு !

என்னை நான் காணமல்
தேடி பார்த்தேன் காற்றோடு
பூங்காற்று சொல்லி போனது
உன்னோடு சேர்ந்ததாக !

எழுதியவர் : பாரதி வினய் (30-Jul-14, 1:14 pm)
Tanglish : unnodu serndhen
பார்வை : 104

மேலே