களைந்து போன கனவுகள்
ஊத காத்து அடிக்கையிலே
உள்ளுக்குள்ள உன்ன நினைக்கையிலே
எட்டுத்திக்கும் உன் குரல் கேக்கையிலே
மனம் கூக்குரல் போடுதடா...
இதய துடிப்பு அதிகமாகுதடா..!!
உன் பேரை கேட்கையிலே
உன் விழியின் தேடல் நானகையிலே
உன் தோளில் நான் சாயிகையிலே
உன்னோடு நான் சேரையிலே
உயிருக்குள் பூகம்பம் வெடிக்குதடா !!
களைந்து போன என் கனவுகளை
ஒரு நொடியில் சேர்த்தாயடா
உன் ஓர பார்வையில்... !!!