எவ்வகை நன்றி இது

படிப்பில் நாட்டமில்லை
ஊடகக் காதல்
ஊறிய மனதில்;
விழித்திருக்கும் போதே
காமக் கனவுகள்.
திரையில் பார்ப்பதெல்லாம்
உண்மையென்று பின்பற்றி
தம்உயிரை மாய்த்திடும்
நெறிப்படுத்தா விடலைகள்.
காதலை தற்கொலையை
பலிவாங்கலை பேராசையை
குறுக்குவழி முன்னேற்றஙகளை
எத்தனை காலத்திற்கு
மிகைப்படுத்திக் காட்டி
என்தாய்திரு நாட்டின்
இளையோரைக் கெடுப்பீரோ?
அவர்களால் பிழைப்பவர்கள்
அவர்கள் கெடத் தூண்டுவதா?
இந்நன்றி எவ்வகை நன்றி
செய்நன்றியின் புதுப்பொருளோ?
(காதல் தோல்வியால் 10ஆம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து சாவு – அதிகாரிகள் விசாரணை – 01-0 8-2014 தினகரன் நாளிதழ் செய்தி பக்கம் – 4, புதுச்சேரி பதிப்பு)