மண்ணில் தவழும் என் மடி மீன்

மண்ணில் தவழும் என் மடி மீன்
விண்ணில் தவழும் வின் மீன் போல் !
மின்னி மினிக்கி மெல்ல மெதுவா நடந்து
கால் பின்னி என் பிடி தேடி கீழே விழுந்து
எழுந்தாய், நடந்தாய் மறுபடியும் விழுந்தாய், அழுதாய்
மண்ணில் துடிக்கும் மீன் போல் நீ
என்னை துடிக்க வைத்து நடக்கும் போது
மறுபடியும் உன்னை மடியில் பதிக்க முயல்கிறேன் !