மழை வேண்டி

ஊர்கூடி உட்கார்ந்து
மாறி மாறி
யோசித்தது…
மாரி வேண்டி…

அண்ணன் சொன்னது…
அன்றைக்கே மழை வேண்டுமெனில்
அம்மனுக்கு பொங்கல்,மாவிளக்கு,
சாமியாடி அருவாக்கு…
கருப்பனாருக்கு கிடா பூசை,

கந்தன் உருகி சொன்னது…
கழுதைக்கு கல்யாணம்
மழை கட்டாயம் வருமுன்னு,
பஞ்சங்கபூசாரி சொன்னது
பஞ்சம் போக
பாஞ்சாலி சாமிக்கு
தீமிதி திருவிழா,

கடைசிவரை யாருமே சொல்லலை
மழை வேண்டின்
மரம் வைப்போம் என்று,
ஊமையான என்னைப் போலவே….

எழுதியவர் : பசப்பி (1-Aug-14, 1:57 pm)
Tanglish : mazhai venti
பார்வை : 206

சிறந்த கவிதைகள்

மேலே