அடுத்த நூற்றாண்டில்

தண்ணீர்ப் பஞ்சம்
தீர்ந்து போகுமா ?
இல்லை
கடலும் கூட
வறண்டு போகுமா ?

கலப்பு இல்லாத
காற்று கிடைக்குமா ?
இல்லை
ஆக்ஸிஜன் கூட
கடையில் விற்குமா ?

தீவிரவாதம்
முற்றிலும் ஒழியுமா ?
இல்லை
குடிநீர்க் குழாயில்
ரத்தம் வழியுமா ?

பஞ்சம் தீர்ந்து
பசுமை பிறக்குமா ?
இல்லை
பட்டினிச் சாவுகள்
பெருகிக் கிடைக்குமா ?

அமைதியான
வாழ்க்கை கிடைக்குமா ?
இல்லை
அணுகுண்டு சோதனை
வீட்டில் நடக்குமா ?

ஓசோன் ஓட்டை
அடைக்க படுமா ?
இல்லை
வானம் கூட
கிழிக்க படுமா ?

செடியில் புதிதாய்
பூக்கள் பூக்குமா ?
இல்லை
பூப்பதை மறந்து
குண்டுகள் காய்க்குமா ?

வறுமை கோடு
அழிந்து போகுமா ?
இல்லை
வறுமை கோடே
வரைபடம் ஆகுமா ?

சாதி சண்டைகள்
ஒழிந்து போகுமா ?
இல்லை
சண்டைகள் இட்டே
மானுடம் சாகுமா ?

உயிர்கள் வாழ்வது
அகிம்சை முறையா ?
இல்லை
எறும்புகள் கூட
தற்கொலை படையா ?

மூத்த மொழியாய்
தமிழ் இருக்குமா ?
இல்லை
மொழிக்கு கூட
முதியோர் இல்லமா ?

எழுதியவர் : ஜின்னா (1-Aug-14, 9:31 pm)
Tanglish : atutha nuutraantil
பார்வை : 156

மேலே