வெற்றி உனதே

நீர் விழுந்தால்
வாழ்வு
நீ விழுந்தால்
தாழ்வு
மலர் சிரித்தால்
அழகு
மனம் தளர்ந்தால்
சோர்வு
முயற்ச்சியில்
தோல்விகள் உண்டு
முடிவில்
வெற்றி உண்டு

பாதை
விரிந்து கிடக்கின்றது
இலக்கினை நோக்கி நட !

மலை
உயர்ந்து நிற்கிறது
முடியை தொடு !

கடல்
ஆழ்ந்து கிடக்கிறது
மூழ்கி முத்துடன் வா !

முயற்ச்சியில்
தோல்விகள் உண்டு
முயன்றால்
வெற்றி உனதே !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (1-Aug-14, 3:33 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
Tanglish : vettri unathe
பார்வை : 2158

மேலே