இக்கவிதைக்குள்ளும் ஆயுதம் இல்லாமல் இல்லை -வித்யா

இக்கவிதைக்குள்ளும் ஆயுதம் இல்லாமல் இல்லை-வித்யா
பார்வையாலே அங்கங்களில்
மேய்ந்து,தேடித் தேடி
முடி முதல் அடி வரை ஆண்மை
வழிந்து வழிந்து ஓடி
இரவுகளின் சிற்றின்ப
மன ஒத்திகை நடத்தும்
காம மிருகங்களின் விழிப்பிதுக்க
ஒரு குண்டூசி போதுமெனினும்
அதைச் செய்யாதே முடித்துக்கொள்ளும்
இக்கவிதைக்குள்ளும் ஆயுதமில்லாமல் இல்லை......!!!