மனிதம்
![](https://eluthu.com/images/loading.gif)
பாச நேச கோபங்கள்
ஆசை மன அவலங்கள்
அடங்கும் வாழ்வின் துயரங்கள்
பிறந்த போது இல்லா ஆசை
வாழும் போது வந்த ஆசை
மண்ணாய் வீழும் போது அடங்கும் ஓசை
அழுகையும் சிரிப்பையும் அகமாய் கண்டால்
அனுபவங்கள் எல்லாம் அற்பமாய் விளங்கும்
பிறந்ததை வாய்ப்பாய் கொண்டு
வருத்தங்கள் களையக் கண்டு
களிப்புடன் வாழ்ந்த பின் மாய்வதே
மனிதம்