உன் முகம் காண

உன் முகம்
காண
என் கண்கள்
காலமெல்லாம்
காத்திருக்குது......கண்ணனே
உனக்காக்
வாடாமல்
பூத்திருக்குது......!!
ஒரு வார்த்தையில்
வானம்
எனதானது.....
உன்னோடு
நான் பறக்கிறேனடா......!!
தவிக்கவைத்து
போனவனே......உனக்காக
உருகும்
உன்னவள்
உள்ளம்
காணாயோ.....?
விழி நீருக்கு
விடை
கொடு.....வீணாய்க்
கலங்கும்
கண்கள்....இனி
வேண்டாமே
ஒருபோதும்......!!