விடை கேட்கும் வினாக்கள்

கேள்விகளைக்
கேட்டுக் கேட்டே
செல்வோர்
எல்லாம்.....ஒருபதிலையும்
கேளாமலே
செல்வதால்......இங்கே
கேள்விகள்
மட்டும்
தொடர் கதையாய்....!!

புதினம்
கேட்பதாய்
நினைத்து
புரளியை
கிளப்பிவிட்டுப்
போவோரும்
வருவார்கள்.....கவனம்
நீங்கள்.......!!

உள்வீட்டுப்
பிரச்சினை
பற்றி எரியும்
போது.....உனக்கு
உலகப்
பொருளாதாரம்
ஒரு கேடு....?
தேடுதல்
கலந்த
ஓடுதல் தான்
வாழ்க்கை.....அடுத்தவன்
முதுகில்
ஏறி அல்ல.....!!

அவலங்களை
தந்தவனுக்கே
அவலத்தைக்
காண்பி.....எனும்
வாசகம்
நிஜமென்று
சொன்னால்
நீ.....என்ன
சொல்கிறாய்....?

வெற்றுக் காகிதங்கள்
கேள்விகளாகி
நிற்கிறது
விடைகளை
நாடி......!!

எழுதியவர் : thampu (5-Aug-14, 12:52 am)
பார்வை : 125

சிறந்த கவிதைகள்

மேலே