காதல் செய்த கோலம்
தண்ணீர் மொள்ள வந்தவளின்
மனம் நிறைஞ்சிப் போச்சி
குடமோ காலியாகிப் போச்சி
பருவ அம்புகளால்
படமெழுதிப் போனவன் -அவளை
பட படப்புக்கு ஆளாக்கி விட்டான் !
பாவை அவள் மனதில்
முள்ளாய் தைத்து விட்டான் !.
வேதனையின் வெளிச்சம்
விழியில் தெரிந்தாலும்
முல்லைப் பூவாய் பெண்
முறுவலித்தாள்..!
பருவம் செய்த கோலத்தால்
பாவையவள் நிலைத் தடுமாறி நின்றிட்டாள்
காளை அவன் நினைவால்
விரலில் சிக்கிய
மயிலிறகும் கனத்தது
கால் கட்டை விரலோ
மண்ணில் கோலமிட்டது
பூத்திருந்த மலர்களும்
சிரிப்பாய் சிரித்தது ...!
துவண்டிட்ட மென் உடலும்
கொடிக் கொம்பின்றி தவித்தது
காதலால் விட்ட அவள்
பெரு மூச்சால் மரக்
கிளையின் இலைகலும்
மனம் வாடித் தவித்தது
பட்சிகளோ இணைத் தேடிப் பறந்தது ..!
பருவ மகன் வருவானோ என
பாவை அவள் காத்திருந்தாள்
கொடி முல்லையாய் பூத்திருந்தாள்