புன்னகையில்

புன்னகை
சிந்தும்
பூவே.....நீ
அங்கிருந்து
அழைக்கும்
கணங்களில்
எல்லாம்....எந்தன்
மனசும்
ஒரு நொடி
புன்னகைத்து
புலம்புதடி.....!!

இந்த
வாழ்க்கை
ஏதோ ஒரு
பக்கத்தை
பறித்துச்
செல்கிறது
எம்மிடம்
இருந்து.....நாளை
நாளை என்று
நாட்கள்
நம்மை
விட்டு
ஓடுதடி.....!!


பக்கத்தில்
இருந்து
பக்குவமாய்
பார்த்துக்கொள்ளும்
பாசமும்
தொலைந்ததடி.....பல
தேசம்
கடந்து
நான் வாழ்க்கை
என்று
பெயருக்கு
வாழ்வதால்......!!

எழுதியவர் : thampu (5-Aug-14, 3:24 am)
Tanglish : punnakaiyil
பார்வை : 111

மேலே