காட்டி கொடுத்த காதல்

நான் உன்னை
காதலிக்கிறேன்.
நீ? என்று கண்களால்
கேட்டு நின்றாய்.

வெட்கத்தால் மறைத்துவிட
தலை தாழ்த்தி நின்றேன்.

வெட்கத்தை வீழ்த்தி
காதல் வெளியே வந்து
என் அப்பன்
குதிருக்குள் இல்லை
என்ற கதையாய்
உன் கண்களோடு
பேசி விளையாடுதே.!

காதலுக்கு கண்ணில்லையாம் .
இப்போது வெக்கமும்
இல்லாமல் போய்விட்டதே!
என்ன சொல்ல?

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (5-Aug-14, 9:54 am)
பார்வை : 82

மேலே