அழகிய தேவதையே

விண்ணில் உள்ள நிலா
மண்ணில் விழுந்து
மங்கையாய் எழுந்தாள் என்று
மயங்கி நின்றேன்...
நீர் வார ஊருணிக்கு
நீ நடக்கும் போதெல்லாம்
நெஞ்சத்துடிப்பை கூட்டுகிறாய்
நிமிடமெல்லாம் என்னை
நெருப்பில் வாட்டுகிறாய்..
காந்த ஈர்ப்பு விசைகள் கூட உன்
கண்கள் முன்னால் தோற்றதடி...
கடிவாளமிட்ட குதிரையாய் நான் உன்னை
காணும் போதெல்லாம்
கட்டிப்போடப்படுகிறேன்
சூரியனிடம் கூட நான்
சொந்தம் கொண்டாடுகிறேன்
சுட்டுவிடாதே அவள்
சுந்தர வனப்பினை என்று...
நெருஞ்சி முட்களிடம்
நித்தம் உரைக்கின்றேன்
நீ வரும் பாதைகளை
நெருங்காதீர்கள் என்று

எழுதியவர் : தஞ்சை கவிஞர் செல்வா (5-Aug-14, 9:08 am)
Tanglish : alakiya thevathaiye
பார்வை : 119

மேலே