சரிகிறது வட்ட வட்டமாய்

ஒரு கவனத்தின்
நிழலில் குவிந்ததில்
தடைகுட்டுகள்
சரிகின்றன....
ஒரு பயணத்தின்
உச்சி தொட்டதில்
கவனங்கள்
சரிகின்றன....
ஒரு கர்வத்தின்
அறம் சுழன்றதில்
பயணங்கள்
சரிகின்றன....
ஒரு நிறுத்தத்தின்
முதுகேறிய சிறகில்
கர்வங்கள்
சரிகின்றன....
ஒரு தொடக்கத்தின்
முதலடி முனைப்பில்
நிறுத்தங்கள்
சரிகின்றன....
ஒரு சமவெளியின்
சரி தவறுகளில்
தொடக்கங்கள்
சரிகின்றன....
மறுபடி......
ஒரு கவனத்தின்
நிழலில் குவிந்ததில்
தடைகுட்டுகள்
சரிகின்றன....