தோழிக்கு பிறந்தநாள்
குறுந்தகவல் வழி தினசரி துயில் எழப்புவாயே !
எனக்கு தேநீர் தேவைப்படுவதே இல்லை !!
மணிக்கணக்கில் உரையாடல் செய்த அலைபேசி அழைப்புகள் என் வாழ்வின் சித்திரங்கள் !!
"சாப்பிட்டாயா" என்பதைக் கூட அவ்வளவு இனிமையாக கேட்பாயே ; நீ ஒரு மழலை !!
நல்உள்ளங்களை தேடிச்சேர முடியாது ; அவை கடவுளின் பரிசுகள் என்பதற்கு உதாரணம் என் தோழமை - நீ !!
தீபாவளி, பொங்கலைப்போல் வருடத்தில் ஒரு முறையாவது உனைப் பார்ப்பேனா... என ஏங்கிக் கிடப்பேனே !!
நண்பர்கள் பலர் இருந்தும் என் நேரத்தை பெருமையாகத் தின்றவள் நீதான் !!
அன்பெனும் வங்கி நீ ; அசலை கூட திருப்பி செலுத்த இயலாத கடன்காரன் நான் !!
உன்னை மனதளவில் காயப்படுத்தி கண்ணீர் வடிக்க விட்ட நாட்கள் எல்லாம் என் வாழ்வின் தீராத வடுக்கள் !!
நிறமிழந்த என் வாழ்வை புதுப்பிக்க வந்த ஒரு வண்ணம் நீ !!
தன் தோழமைக்கு பரிசில் பல அளித்த நண்பர்களை நான் அறிவேன் ; நான் உனக்கு அளித்ததில் பெரும்பங்கு கண்ணீருக்கு தான் !!
'மன்னிப்பு' என்பதை வீணாக்கி நம் நட்பை கொச்சப் படுத்த விருப்பமில்லாமல், வார்த்தையை சேமிக்கிறேன் !!
உன் வாழ்வில் என்றென்றும் இன்பம் நிறைய வாழ்த்துகிறேன் !!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
- இப்படிக்கு தாய்மொழியைப் பரிசில் தரும் ஒரு வேலையில்லா பட்டதாரி !!