கனவு கண்ணன்

மாலை பொழுதின் தொடக்கத்திலே
கனவுகளில் மூழ்கி விட்டேன்
கனவுகளில் கண்ணனின் ராஜ்ஜியம்
யார் அந்த கண்ணன் என்று
தெரியாமலே
விடிகின்றது
என் வானம் !!

கடலில் விழுந்தால்
கரை சேரலாம்
என் கனவுகளில்
உன் நினைவுகளில்
விழுந்துவிட்டேன்
கரை சேர்வேனோ ?
மாட்டேனோ?
பல வினாக்கள்
என்னுள் தினம் !!

உயிர் என்னும் அரண்மனையில்
காதல் என்னும் சிம்மாசனம் போட்டு வைத்தேன்
எப்போது அரசன் என்னும் மணி மகுடம் சூட வருவாயோ ?

ஒரு கிளையில் பூத்த பூவை போல
தினம் வாடி போகிறேன்
உன்னை காணமல் !!
என் கனவுகளுக்கான
உன் பெயரையாவது சொல்லிவிட்டு போ !!

தினம் விடியலில்
நினை
பிரியும் போது
என் தாய்
மொழியை
மறக்கிறேன் !!

உனக்காக தினம் இரவுகளில்
காத்து கிடக்கும் பனித்துளி நான் !!
நீயோ எனை கண்டும் காணமல்
கடந்து செல்கிறாய் சூரியனை போல !!

எழுதியவர் : பாரதி வினய் (7-Aug-14, 11:31 am)
சேர்த்தது : Bharathi
Tanglish : kanavu Kannan
பார்வை : 240

மேலே