ஏக்கம்
![](https://eluthu.com/images/loading.gif)
பெற்றெடுத்த பிள்ளையை...
பொருளிற்காக ஏங்க வைக்கலாம்
பாசத்திற்காக ஏங்க வைக்கலாமா?
பாசத்தில் திளைத்த எந்த குழந்தையும்
பொருளை நினைத்து ஏங்குவதில்லை!
பொருளை மட்டுமே பெற்ற குழந்தை
பாசத்தை தேடி ஏங்கி அழைகிறது!
பொருளை யாரேனும் ஈட்டி கொடுத்து விட முடியும்
உன்னை அன்றி யாரேனும் பாசத்தை கொடுத்து விட முடியுமா???
இதை அறியாத மனிதா!
கொட்டி கொட்டி யாருக்கு சேர்க்கிறாய்?
உன் பிள்ளையின் பாச ஏக்க சமாதிக்கா???