முப்பொழுதும் பொதுநல​மே ​ சிந்தியுங்கள்​​

ஆபத்தை அழைத்தே செல்கிறார்
ஆபத்தை உணராதவர் என்பதாலா
ஆபத்து அடுத்தவர்க்கென அறியாமலா !

ஆபத்தை தேடிசெல்வோரும் உண்டு
ஆபத்துகள் நாடிவருவதும் உண்டு
ஆபத்தை அறியாதவரும் பலருண்டு !

விதியென்று நினைத்து வாழாதீர்
விதிமுறை அறிந்து வாழ்ந்திடுவீர்
வீதிகளும் பொதுவென மறக்காதீர் !

முன்னேறுகிறீர் உங்களை எண்ணியே
பின்னேறுகிரீர் சுயநலமாய் எண்ணத்தில்
முப்பொழுதும் பொதுநலமே சிந்தியுங்கள் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (8-Aug-14, 9:03 am)
பார்வை : 186

மேலே