வேளாங்கண்ணி ஆலயம் நாகப்பட்டினம் - சி எம் ஜேசு

விண்ணை முட்டும் கோபுரங்கள்
கண்ணைக் கவரும் வெள்ளை நிறங்கள்

பறந்து விரிந்திருக்கும் ஆலய இடவசதிகள் - அதில்
நிறைந்து குழுமியிருக்கும் மக்கள் கூட்டங்கள்

புதிய புதிய வளர்சிகள் கண்டு
உளம் பூரிக்கும் திருப்பயணிகள்

பெயர் பெற்ற ஆலயம் ஒன்றெனினும் - அதனை
சுற்றி உருவாகி இருக்கும் சிற்றாலயங்கள் தெய்வீகம்

சிலுவைச் சிந்தனையை உருவாக்கும்
மாதா ஆலய கட்டமைப்புகள்

தியானங்கள் செய்து மனதை புனிதமாக்கும்
மக்களின் புதிய புதிய வழிபாடுகள்

வழித்தடங்கள் சிறிதெனினும்
கடைத் தளங்கள் ஏராளம்

காட்சிக்கு சான்று ஆட்டோக்களின் பயணங்கள்
சாட்சிக்கு சான்று திருப்பயணிகளை தாங்கும் இல்லங்கள்

குறைகள் கொட்டி மனம் நிறைந்து கரையேற
அழகிய கடற்கரை இங்கே தேவை

நாகப்பட்டினம் மக்களுக்கு மட்டுமல்லாது உலகில் வாழும்
ஆன்மீக மனங்களுக்கு வேளாங்கண்ணி ஆலயம் ஆதாரம்

உலகத்தரத்தில் உருவாகியிருக்கும் விடியர்க் காலை ஆலயம் -அதில்
உலகை உள்ளிழுக்கும் வளாக பரப்புகள் யாவும் இன்பம்

கூட்டாஞ்சோறு கடலுணவு சிகை மறந்து வேண்டுதல் செய்து
குடும்பங்கள் குழுமி நிறைவடையும் தெய்வீகம் அன்னையின் ஆலயம்

இறங்கும் போதும் ஏறும்போதும் - நல்ல
ஏற்றத்தையும் மாற்றத்தையும் தரும் ரெயில் கோபுரங்கள்

வாழ்த்துக்கள் பதிக்கிறேன் இன்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளதால்
சி.எம் .ஜேசு பிரகாஷ்

எழுதியவர் : சி .எம் .ஜேசு (8-Aug-14, 11:44 am)
பார்வை : 76

மேலே