அமரர் சுசிலா மணி நினைவு நாள் போட்டி கவிதை

உன் விரலுக்குள் என் வாழ்வு....... 
எனது நடை வண்டி நீ..... 
கரிசன களிம்புக்காரன்..நீ . 
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்....
 
நிலா எரிய  கதகத கதைகள்
நான் துயில சமைப்பாய் நீ
வளர வளர விலகிய என்னை
அறியத்தளரா தாராளம் நீ
வீதியில் விளையாட தடிப்பதும் நீ
வெயிலில் நீராய் காய்ந்திடாது
வெஞ்சனம் நானுண்ண தவிப்பதும் நீ
 
நாளைக் கடப்பாய் எனை அள்ளி
சிகரம் வளையும் அன்பன் நீ
என்னுயிரின் அகரம் நீ
துன்பம் துளிர்க்கா வாழ்வளித்தாய்
 
என் புதினங்களில் இல்லை நீ
நானன்றி புதினம் உனக்கில்லை
எனக்காய் சுவாசித்தே சுழன்றவன்...

நான் செய்யும் இதற்கும் அதற்கும்
தோள் தட்ட துடிப்பவன் நீ
பேசாத பார்வையிலும் தீர்வாய் நீ
பிணிக்கும் மருந்தாகி உன் மனமளிப்பாய்....
 
என் சிறகு உனது கனவு
உனது பாதை என் வானம்
வகையில்லா வசதி நீ
எனது வசந்ததின் அகராதி நீ
 
வாராத் தொலைவு உன் நகர்வு
திகட்டா நினைவெல்லை நீ
திட்டுகளாய் மனதினில்...நீ
எல்லா கணமும் என்னுள்ளே.....

எழுதியவர் : சர்நா (10-Aug-14, 8:38 am)
பார்வை : 195

மேலே