ஒரு பிரிவின் அழுகை
உறக்கத்தில்
இருந்து விடுபடும்
விழிகள் போல
இதயத்தில்
இருந்து விலகாது
உன் நட்பின் உணர்வுகள்!
வயிறு பருத்து
உடலுக்கு
முன் நடப்பது போல
வெளியில் முட்டையிடாமல்
உள்ளே இருந்து
உயிர் குடிக்கிறது
உன் நினைவுகள்!
என் முகம்
ஒளி வீசுவது போல
அகத்தில் ஒளி இல்லை!
இருளாகவே தினமும்
இயங்கும் குருட்டறையாக!
பல்லிளிக்கும்
உன் நினைவுகளால்
மனம் துலக்கப்படுவதில்லை...
அடர்த்தியாய் வளர்ந்து
ஆயுளை குறைக்கும் படி
அவரப்படுத்துகிறது!
அரும்பிய மொட்டு
ஒன்று பூக்காமல்
தைக்கும் முட்களாகவும்
பிறாண்டும் பேய்யாகவும்
பிரிவின் துயர்
ஊசலாடுகிறது
உருவமில்லாமல்!
மிஹிந்தலைஏ.பாரிஸ்