பதியப்படாதவைகள் - 2 - வீடு
பதியப்படாதவைகள் - 2 - (வீடு)
==========================
உனக்காக வாயிற்பெருக்கி
முன் கதவுத்திறந்து
விளக்கேற்றி வைப்பார்கள்
உன் எண்ணிலடங்கா
வருடாந்திர கடக்கைகளினால்
இன்றெல்லாம் திண்ணை விளக்கும்
எரியும் வழப்பமாகிவிட்டது
மின்விசைமாற்றியின்
திருகுச்சுருள் கம்பியின் ஆயுட்காலாவதியால்
உயிரைக்கண்ணீரில் உறையவிட்டு
கண்டிடும் பொழுதெல்லாம்
கரைத்தாண்டிடுமதனை
இமையெனும் மதகால்
அடைத்துவிட எண்ணிய
உனக்கான யாரோ சிலரின்
அசரீரிக்கூப்பாடு மட்டுமே மீந்தியது இன்று
மின் கட்டணம் கூடிக்கொண்டே
இருந்த இரவுகள் மாறி
குறைந்தபட்ச கட்டணங்கள்
அழைத்துக் கொண்டிருக்கிறது
உனக்கும் எனக்கும்
இனி ஒன்றுமே
இல்லாமற்செய்துவிட்டுப்போகலாம்
என்றால் ,, வரியிட்டு
வாரியணைக்கிறாய் கடனாளியாக்கி
அனுசரன்