மௌனம் கலைந்த போது
துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்ட
கிராமத்தில் மங்கள வாத்தியம்
முழங்குகின்றது
பல உயிர் பலிகள் நடந்த இப்
பூமியிலெ மங்கள நாண் பூட்டும்
சப்தமும்
இடி இடித்த நெஞ்சங்களில்
அமைதியான சந்தோசமும்
சாதுவாக இழையோடுகின்றது
தியாகம் நிறைந்த இப் பூமியிலெ
பிறந்த எனக்கும்
தியாக குணம் இருப்பதில்
சந்தேகமில்லை தான்
உயிரை பணயம் வைத்து
செய்யும் எந்தக் காரியமும்
தோற்ற தாகச் சரித்திரமும்
இல்லைத்தான்
இருந்த போதும் என்
மனதுள்ளே சிறு சந்தேகமும்
இலயூடாமல் இல்லை
எல்லா சந்தர்பங்களும்
ஒரே மாதிரி இல்லை
என்பதயும் நான் விளங்கிக் கொள்ளாமல்
இல்லை
இருந்தும் மௌனமே பல வினாக்களுக்கு
விடையாக அமையும் என்பதால்
மீண்டும் மௌனமாகிறேன்
இரந்தும் என் உயிர் பிச்சை
கேட்பவள் நான் அல்லல்
எனவே தான் துணிந்து
நடக்கிறேன் என் வழியில்
என் பதில் ஒரு வேளை
விநோதமாக இருக்கலாம்
ஆனால் அதுவே நிதர்சனமான
உண்மை ஆகும்