இதயத்தின் கண்ணீர்- அரவிந்த் C
ஜன்னலோரம் அமர்ந்து
சாரலை ரசித்தேன்,
என் மீது தெளித்த
சாரல் சிதறியது,
உன் நினைவாய் என்னுள்ளே...!
உன் நினைவைத் தூண்டி,
இயற்க்கையும்
இம்சை செய்கிறது...!
அஸ்தமிக்கும் சூரியன்
அருகினில் நீ,
வெட்கத்தில் சிவந்த வானம்
நடுங்கிய என் கைகள்
உதறிய என் வார்தைகள்...!
மறக்கவில்லை
அந்த நாளை,
இதுவரை முயற்சித்தும்
தோற்றுப் போகிறேன்,
தோற்கும் நிமிடம்
தொலைந்துப் போகிறேன்...!
என் கைகளில் படிந்த
உன் ரேகைகள்,
நம் கதைகள் சொல்லுதடி
தினமும்...!
என் செவிகள் மட்டும் கேட்கும்
சங்கீதங்களாய் உன் சிரிப்பு,
வெற்றிடமாய் இருக்கும்
உன் இதயத்திற்குள்
எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது...!
ஏக்கங்கள் கூடிப் போனது
ஏமாற்றங்கள் நீண்டுப் போனது
உன் நினைவு நிரந்தரமானது
என்னை நீ விட்டுச் சென்றதன்
காரணம் புரியாத விடுகதையானது...!
நீ இல்லா நிமிடங்கள்
எமனாய் மாறியது..
கடிகார முள்ளும்
காயங்கள் தருகுது..
இறந்துகொண்டே வாழ்கிறேன்
உன் நினைவில்
இருந்துக் கொண்டே சாகிறேன்
பெண்ணே...!