பதியப்படாதவைகள் - 3
பதியப்படாதவைகள் - 3
======================
என் கையில் விளம்பிய
முதல் உருண்டை சோற்றில்
உப்பின் சுவை அற்பம் கூடிகாணும்
தாய் முதலில் சொல்லாமல் சென்றதால்
தந்தை பின்பு சொல்லிச் சென்றார்
நானும் இதோ
போய்க்கொண்டே இருக்கின்றேன்
ஆனால் எனக்கு
சுய அழிப்பில்(Self Destruction)
இஷ்டமில்லை
நான் முறிவுகளுடைய வசந்தம் என்பதால்
மனிதனாகி நான்
சமூகத்தினுடைய வெராந்தாவில் (தாழ்வாரம்)
ஒற்றைக்கு நடந்துபோகின்றேன்
வாழ்நாள் வரமாக
என் கவிதையின் நிழலில்
கழிய விதிக்கப்பட்டிருக்கின்றேன்போல்
வழித்துணைக்கு வந்தவர்களுக்கும்
தாகந்தீர்க்க தண்ணீர்த்
தராதவர்களுக்கும் நன்றி
ஆட்கூட்டங்களுக்கு அப்பாற்பட்டு
விரிந்த தெருவிலும்
கொஞ்சம் தூவியப்படியிருக்கும் என் வார்த்தைகள்
உன்னித்து கேட்போருக்கு
சொந்தமாய் ஒரு கூடில்லாத
அந்த மரத்தடியில் வசிக்கின்றவர்களின் மனதிலும்
அட்சரமாக பாடியப்படியிருக்கும் கொஞ்சம்
இத்தனை காலங்களாய்
உணர்வுகளுடைய
சிதில பிம்பங்களுக்கெனவே
கவிதைகள் எழுதி
யாவரும் பார்க்காதவண்ணமே
ஒளித்துவைத்துவிட்டேன் என்னை அதற்குள்
உடலிலிருந்து என் ஆயுளை
நரமனிதர்கள் யாராவது
நங்கூரமிட்டு இழுக்காதவரையேனும்
எனக்குள் இவைகளுக்கு
விலாசமிருந்துவிட்டுப்போகட்டும்,,, விலாசமிருந்துவிட்டுப்போகட்டும்,,,
அனுசரன்