காற்றில் எரியும் தீபங்கள்

பாட புத்தகம் தூக்க வேண்டிய
பட்டுபோன்ற தோள்கள்
பாரங்கட்களை தூக்கி
பரிதவிக்கிறது....

பட்டாம்பூச்சியாய் பறக்கும் வயதில்
பாவமறிய சிறார்கள்
பட்டுநூலுக்காக பலியிடப்படுகிறது

தீபமாய் சுடர்விடும் ஒளிகளை
தீ பந்தமாய் மாற்றி
தீப்பெட்டி சாலையின்
தீ குச்சிகளாய் அடுக்குகின்றனர்..

வசந்தக்காலமான வாழ்கையில்
வாழ்விடமின்றி உணவின்றி
வானவேடிக்கைக்காக - அவர்கள்
வானவில்லாய் மறைகின்றனர்...

குடும்ப சூழலால் - முதலாளியின்
குறைவான ஊதியத்துகும்
குப்பை கூட்டியேனும் கும்பிடுபோட்டு
குடித்தனம் நடத்துகின்றனர்...

ஓராயிரம் கோடி மக்கள் தலைவன்
ஒருநொடியேனும் இவர்களை சிந்தித்தால்
ஓராயிரம் தீபங்களை
ஒருசேர ஏற்றலாம் - ஆனால்

சுமையின்றி வாழவேண்டிய இவர்கள்
சுமையோடு வாழ்வதால் - இவர்களின்
சுதந்திரமாய் கொண்டாடும் நாள்
குழந்தைகள் தினமா?
தொழிலாளர் தினமா?

அன்புடன் மணிசந்திரன்

எழுதியவர் : மணிசந்திரன் (13-Aug-14, 7:38 pm)
பார்வை : 98

மேலே