அலைபேசியில் சீரழியும் இளம் சிறார்கள் - திருப்பூர் கவிஞர் இரா சந்தோஷ் குமார்
நன்றி : திரு ஹாசிப்கான்(ஒவியம்)
-------------------ஆனந்த விகடன்
அரும்புகளின் கையில்
அலைபேசி எந்திரம்...
அலைபேசியால் தினம்
அலைப்பாய்கிறது மனம்...
விலையில்லா நாட்டின் மானம்
விலைப்போகிறது அவமானம்...
அலைப்பேசி விற்பனை மையங்களில்
அலைமோதுகிறது மாணவ செல்வங்கள்
அற்பகாசுக்கு பதிவேற்றப்படுகிறது ஆபாசங்கள்...
புற்றீசல்களாய் நீலப்படங்கள்
கிளுகிளுப்பாய் நிழற்படங்கள்
அத்தனையும் பாலுணர்வுக்கு முதலீடுகள்...
உடலுறவு காட்சிகள் யாவும்
அலைபேசியில் உலாவும் கேளிக்கை...
பள்ளியறை காட்சி நினைவுகளால்
பாடசாலைகளில் முதலிரவு ஒத்திகை...
இளம் சிறார்களின் பார்வைகளில்
இழையோடுகிறது காமக்கோணம்...
இளங்கன்றுகளின் மூளைகளில்
உள்நுழைகிறது காமசூத்திரம்...
விடலைகளின் மோகம்
முலைகளை படமாக்குகிறது...
பிறப்புறுப்பினை படமெடுத்து
இணையதள வீதியில்
அம்பலப்படுத்தி ரசிக்கிறது...
உடன்படிக்கும் தோழியர்களுடன்
உடன் படுக்க வேண்டுகிறது...
உடன்படவில்லை என்றால்
வன்கொடுமையை தூண்டுகிறது...
அய்யகோ....!
நாளைய மன்னர்களாம் இவர்கள்...
இன்றைய காமக்காட்டேரி கொடூரர்கள்...
ஏய் ........!
குற்றவாளிகளை உருவாக்கும் பெற்றோர்களே...!
குற்றம்செய்து விட்டீர்களே....!
நற்பழக்கத்தில் வளர வேண்டிய செல்லங்களுக்கு
செல்பேசியை கையில் கொடுத்தீர்களே...!
செல்பேசியால் செல்லப்பிள்ளைகள்
செல்லரித்த பிஞ்சுகளாய் அழுகுகிறதே...!
கொஞ்சிக்கேட்டால் நஞ்சுகளை கொடுப்பீரோ...?
மிஞ்சிடும் பாலுணர்விற்கு காரணமாவீரோ...?
எழுதுகோல் ஏந்தும் பிள்ளைகளுக்கு
கொடுங்கோல் செல்பேசி எதற்கு?
கல்வி மதிப்பெண்களையும் தாண்டிய வாழ்க்கை
மதிப்பீடு நடத்தைகள் வேண்டாமோ... ?
வன்கொடுமைக்கான முதல் குற்றவாளிகளே...!
கலாச்சாரத்தை சீரழிக்கும் காரணிகளே...!
பணதிமிர் பிடித்த பெற்றோர்களே...!
பிள்ளைகளை வெறும் காமத்திற்குதான் பெற்றுவிட்டீர்களோ....?
உங்கள் பேர் சொல்ல திரிகிறதோ வாரிசுகள்... ?
இனியேனும் திருந்திட பாருங்கள்!
இல்லையேல்...
புதைகுழியில் வீழ்ந்து செத்துமடியுங்கள்...!
திருப்பூர் கவிஞர் இரா.சந்தோஷ் குமார்