உறவுகள் என்பது எப்போதும்
நீயும்... நானும் ...
பல தலைமுறைகள்
கடந்து வந்ததை உணர்கிறோம்...
நம் தேகங்கள் கூட
தற்போது
உருவம் பெற்றிருக்கவில்லை...
நம் உறவுகள் கூட
நம்மை பற்றிய
நினைவுகளுக்கு
நிறம் மாற்றி விட்டனர்...
இருந்தாலும்
நாம் விட்டு சென்ற
கடைசி முச்சு காற்றும்
முகம் பார்த்து கொள்கிறது ...
இதயத்துடிப்பும்
இதழ் பேசிக்கொள்கிறது...
இப்போதும் கூட
நீயும் நானும்
வாழ்வதாகவே நினைக்கிறேன்!