களவு போன சுதந்திரம்

தந்திரங்கள் ஏதும் செய்யவில்லை !
சுதந்திரத்தைப் நாம் பெறுவதற்கு !!

உத்தமர்களை யுத்தத்தில் இழந்து,
நாம் பெற்ற சுதந்திரத்தை,

சுயநல உலகில் தொலைத்து,
சுதந்திரத்தை தேடி அலைகிறோம் !

தேசத்தின் மீது அதீத
நேசம் கொண்டவர்களாக நடித்து,
வேசம் போடும் மோசக்காரர்களாக
- அரசியல்வாதிகள் !

காசுக்காக ஓட்டை விற்று,
நீதிக்காக அலைந்து ஓய்ந்து,
வீதியில் நிற்கும் வீணர்களாக
- மக்கள் !

அகிம்சையோ இம்சையோ,
போராட்டம் எதுவானாலும்,
கிடைக்குமா மீண்டும்
களவுபோன சுதந்திரம் !

எழுதியவர் : கர்ணன் (14-Aug-14, 9:24 pm)
பார்வை : 914

மேலே