அது இது எது-வித்யா

அது இது எது..?-வித்யா

சுதந்திரம் சுதந்திரம்..........
அவர்கள் கூவினர்
கதறினர்
கண்ணீர் சொரிந்தனர்
ரத்தம் சிந்தினர்
புறக்கணிக்கப்பட்டனர்
அக்குரல்கள் பின் மரணித்தன
"சுதந்திரம் வெளியே வந்தும்
சிறைபட்டது"..........!!!

சமத்துவம் சமத்துவம்.............
அவர்கள் வாதாடினர்
போராடினர்
மன்றாடினார்
மடியேந்தினர்
விதியென்றெண்ணி கரையொதுங்கினர்
"கோவிலுக்கு வெளியே செருப்பென
சமத்துவம் சபைதனிலே பரிமாறப்பட்டது"...........!!!

அமைதி அமைதி.............
அவர்கள் தேடி அலைந்தனர்
தொலைத்துக்கொண்டே தேடினர்
சபித்துக்கொண்டே பிரார்த்தித்தனர்
வலியுறுத்திக்கொண்டே மறந்தனர்
"இறுதியில் மலர்வளையம் வைத்துவிட்டு
ஓ வென சப்தமாக கதறினர்"..........!

சிறைபட்ட சுதந்திரம்
ஏற்றத்தாழ்வில் உயிர்வாழும் சமத்துவம்
இரைச்சல் தாலாட்டும் அமைதி.......!!!

தனக்குத்தானே சுயம் பேணி
மனிதம் கொள்ளும் மானுடம்
மேல் கூறிய மூன்றும் இன்றி..........!!!



Freedom, equality and peace
They must and will go together hand in hand,
No one! Has the right to cause them to cease
No one! By a request or by any demand.
In this time of life and living, we all deserve an equal piece,
I say freedom for all! Equality forever! And, peace let us teach!

எழுதியவர் : வித்யா (14-Aug-14, 10:00 pm)
பார்வை : 296

மேலே