கடிதம்

கடிதம் எழுதும் போது
கனிவான சொற்களை பயன் படுத்த வேண்டும்
கடினமான சொற்கள் காகிதத்தில் வரும் போது
கண்கள் கலங்குகின்றன
கோபமும் வருகிறது சில சமயங்களில்
கடிதங்களை படிக்கும் போது
மயக்கமேவந்துவிடும்,
கடிதம் என்பது ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் அரிய செயலாகும் .
அத்தகைய கடிதம் அன்புடனும் பண்புடனும் கனிவுடனும்
எழுதப் பட வேண்டும்

கடிதம் எழுதுவது, அனுப்புவது
அன்பான ஆரோக்கியமான ஒன்றாகும்
ஒருவர் தன் மனதில் உள்ள ஆதங்கத்தை
உறவுகளுக்கோ, நண்பர்களுக்கோ
ஆசையுடனும் அன்புடனும் தெரிவிப்பது
இந்த கடிதம் மூலமே
பக்குவமான முறையில்
பல செய்திகளையும், இரகசியங்களையும்
பரிமாறிக் கொள்ள
உதவும் கருவி கடிதமாகும்

கடிதம் எழுதும் முறை
பண்டைக்காலம் தொட்டு
நடைமுறையில் உள்ள நல்ல செயல்
இன்றைய கால கட்டத்தில்
உடகங்கள் தொலைபேசிகள்
புதிய கண்டு பிடிப்புகள் வந்து விட்டதால்
மக்களிடையில் கடிதம் எழுதும்
பழக்கங்கள் குறைந்து விட்டன

இருந்தும் கடிதம் எழுதும் போது
உள்ள ஆர்வம், ஆசை, அன்பு
எந்த சாதனங்களாலும் நிறைவேற்றிட இயலாது
நம் கை எழுத்துக்களால் நிரம்பும்
பாச வலைகள் .கடிதங்களே

எழுதியவர் : பாத்திமா மலர் (14-Aug-14, 10:18 pm)
Tanglish : kaditham
பார்வை : 354

மேலே