கவிதை மலரில் தமிழே தேன் துளி
வெட்ட வெளியில்
பனித் துளி - மலரில்
வெட்கப் பட்டே
தேன் துளி..!!
பட்டாம் பூச்சிக்கு
எது பிடிக்கும் ? இதைப்
பார்த்து உணர்ந்தால்
மனம் தெளியும்..!!
அடங்கி இருப்பது
அறிவின் செறிவு..!
அடங்காமல் எழுவது
அது அழிவு...!
அடடா எங்கே பனித்துளி ?
அதற்குள் மறைந்து போனதே...!!
அந்த மலரில் தேன் துளி
அடங்கி இனிமை வழங்குதே...!!
பயனைத் தந்து நாம் மறைவோம் - அதற்கு நல்ல
பாடமாய் மலரில் தேன் துளியே....!!