மரம்
நான் வெயில் காலத்தில்
நடந்து சென்றேன்
ஒரு பாலை வனத்தில்
நீயோ வெகு தூரத்தில்
இன்னும் எனக்கு கானல் நீராய்
நான் நடந்து சென்றேன்
புழுதி வயலால்
அங்கும் என்னை ஏமாற்றி விட்டாய்
நானும் உன்னைத் தேடி ஓடி
வருகிறேன்
நீயோ என்னை விட்டு நீண்ட தூரம்
செல்கிறாய்
நான் ரயிலில் பயணம் செய்தேன்
நீயோ என் எதிர் திசையில்
பயணம் மேட் கொண்டாய்
நான் தண்ணீரை தேடுகிறேன்
நீயோ நிழலைத் தருகிறாய்