எல்லாமே நீ ஆகிறாய்

நான் தாகம் என்கிறேன்
நீயோ தண்ணீராய் வருகிறாய்

நான் சோகம் என்கிறேன்
நீயோ என் தாயை போல வருகிறாய்

நான் வர்ணங்கள் என்கிறேன்
நீயோ வானவில் ஆகிறாய்

நான் சித்திரம் என்கிறேன்
நீயோ தஊரிகையாய் வருகிறாய்

நான் மானம் என்கிறேன்
நீயோ என் சேலை போல வருகிறாய்

நான் பொறுமை என்கிறேன்
நீயோ என் முன்னால் நிலம் ஆகிறாய்

நான் வானம் என்கிறேன்
நீயோ என் முன்னால் நீலம் ஆகிறாய்

நான் நிலா என்கிறேன்
நீயோ என் முன்னால் நட்சத்திரம் ஆகிறாய்

நான் வெள்ளி என்கிறேன்
நீயோ என் முன்னால் ......................................................................

எழுதியவர் : புரந்தர (16-Aug-14, 5:38 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 101

மேலே