பசுமை நினைவுகளே
சின்னம் சிறிய வயது
சிற்றூரில் பிறந்து
சிக்கித்தவிக்கும் எண்ணங்கள்
நிழலாடுது ஞாபகங்கள்
பொன்வண்டு பிடித்து
கால்களை உடைத்து
முள் கொண்டு தைத்து
பிரண்டையில் குச்சினை இணைத்து
வலியால் வண்டு துடித்து
சுழன்று பறக்க என்மனம்
வானில் சிறகை விரிக்கும்
தும்பியை பிடித்து
நூலில் வாலை இணைத்து
கல்லொன்று சுமக்கச் செய்து
களிப்புற்ற நாட்கள் நினைவில்
அறியா வயது ஆனந்தத்தில் மனது
வண்ணத்து பூச்சி
தும்பையில் தேனருந்த போச்சு
பின்தொடர்ந்து நானும் அதை
பிடித்து பையில் நிரப்பி
வாலில் நூலினைத்து
வானில் பட்டமாய் பறக்கச் செய்து
உயரபறக்கையில் சுண்டி இழுத்து
அதன்துன்பத்தில் ஆனந்தம் கண்டோம்
எல்லா வினைக்கும் எதிர் வினையுண்டு
என்பதை இப்போது அறிந்தேன்
ஆண்டவன் கையில் நூல் கொண்டு
என்னை சுண்டுகிறான் எங்கிருந்தோ !