முகபுத்தக நட்பு
![](https://eluthu.com/images/loading.gif)
முகமறியேன்
நிறமறியேன்..
முகபுத்தகத்தில் நிழலறிவேன்..
குரலறியேன்
கருவிழி மொழியறியேன்
விரல்களின் மொழியறிவேன்..
ஆயிரமாயிரம் மைல் கடந்து
ஆனை வடிவ மலை கடந்து
ஆழ்ந்து விரிந்த கடல் கடந்து
பூந்தென்றல் சுமந்து வந்ததோ
கார்மேகம் சுமந்து வந்ததோ
மின்காந்த அலை சுமந்து வந்ததோ
என் மடி சேர்ந்த உன் நட்பை...