நீயின்றி -அனைத்தும் என்னைப் போலவே மாறிடுது

விடியலது காத்துக்கிடக்கிறது..
உன் முகத்தை காண்பதற்காக...
என்னைப் போலவே...!

அடர்ந்த கூந்தலது மெலிகிறது..
நீ வந்து பூச்சூடாமல்...
என்னைப் போலவே...!

கால்களது தடுமாறுகிறது...
உன் துணையின்றி...
என்னைப் போலவே...!

செடிகளது பூக்க மறுக்கிறது...
உன் வரவின்றி...
என்னைப் போலவே...!

வேண்டுதல்களது வீணாகிறது..
நீ செவிமடுக்காது...
என்னைப் போலவே...!

உணர்வுகளது பட்டுப்போகிறது..
உன் வருடல்களின்றி...
என்னைப் போலவே...!

நினைவுகளது கசக்கிறது..
உன் நிஜங்களின்றி...
என்னைப் போலவே...!

உலகமது நின்றுவிடுகிறது...
உன் அன்பின்றி...
என்னைப் போலவே...!

நிமிடங்களது நடுங்குகிறது..
உன் கைக்கோர்க்காது...
என்னைப் போலவே...!

குளிர் நிலவுமது சுடுகிறது..
உன் அணைப்பின்றி...
என்னைப் போலவே...!

பெண்மையது வாடுகிறது...
உன் காதலின்றி...
என்னைப் போலவே...!

இவற்றையெல்லாம்..
நீயும் உணர்கிறாயா......
இவளைப் போலவே...!!

எழுதியவர் : மணிமேகலை (16-Aug-14, 10:49 pm)
பார்வை : 438

மேலே